பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் 'கணக்கு' இடிக்கிறது; கிராமங்களில் அதிரடி ஆய்வு: இனி, தட்டுப்பாடு நீங்குமா?

Added : ஜூன் 12, 2019
Advertisement

திருப்பூர்:நீண்ட நாட்களாக சந்தித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், திருப்பூர் ஒன்றிய நிர்வாகமும் இணைந்து நடத்தும், கூட்டாய்வு நேற்று துவங்கியது.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 ஊராட்சிகள், 110 குக்கிராமங்கள் உள்ளன. கடந்த, 2011 கணக்கெடுப்பின்படி, 90 ஆயிரத்து, 774 மக்கள் வசிக்கின்றனர்.மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகள், பல்லடம் தொகுதிக்குள்ளும், மற்ற 10 ஊராட்சிகள், திருப்பூர் வடக்கு தொகுதிக்குள்ளும் அமைந்துள்ளன. வடக்கே உள்ள, 10 ஊராட்சிகளிலும், குடிநீர் பிரச்னைக்கு குறைவில்லை.

தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்திடம் இருந்து, அதிக விலைக்கு தண்ணீரை வாங்கி, மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.காளிபாளையம் நீங்கலாக, வடக்கே உள்ள, ஒன்பது ஊராட்சிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மூன்றாவது திட்ட குடிநீரை வினி யோகித்து வருகிறது.

இரண்டாவது குடிநீர் திட்டத்தில், மங்கலம், இடுவாய், முதலிபாளையம், காளிபாளையம், பொங்குபாளையம் ஊராட்சிகளுக்கு, தினமும், 10. 60 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். மூன்றாவது திட்டத்தில், ஒன்பது ஊராட்சிகளுக்கு, 16.40 லட்சம் லிட்டர் ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீரை ஒதுக்கினாலும், தீராத தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தண்ணீர் ஒதுக்கீட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதால், மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, குடிநீர் வினியோகம் செய்ய இயல்வதில்லை.கலெக்டர் உத்தரவுப்படி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பி.டி.ஓ.,கள் இணைந்து, குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். குடிநீர் எடுப்பு மற்றும் வழங்கல் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, வீண் விரயம் எங்கு ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடிவு செய்துள்ளனர்.

பி.டி.ஓ., கனகராஜ் கூறுகையில், 'குடிநீர் வடிகால் வாரியம், சரியான அளவு தண்ணீரை வழங்கு வதாக கூறினாலும், ஊராட்சிகளுக்கு சரியான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, 12 முதல், 16ம் தேதி வரை, குடிநீர் எடுக்கும் இடத்திலும், அந்தந்த ஊராட்சிகளில் தண்ணீர் பெறும் இடத்திலும், சரிபார்ப்பு நடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பின் அடிப்படையில், என்னகாரணம் என கண்டறிந்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.கணக்கெடுப்பு முடிவுகளை பார்த்து, இரண்டாவது திட்ட குடிநீரை முறையாக வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 3 வது திட்டத்தில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் கிடைப்பதால், தற்போதைய மக்கள் தொகையை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப, மானிய விலையில் குடிநீர் வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X