பொது செய்தி

தமிழ்நாடு

18 ஆண்டு கோரிக்கைக்கு பலன்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 18 ஆண்டு கோரிக்கைக்கு பலன்

திருப்பூர்:மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலனாாக, வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் தபால்துறை சார்பில் புதிய தபால் பெட்டி நேற்று நிறுவப்பட்டது.
காட்டன் மார்க்கெட் தபால்நிலையத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் இரண்டு கி.மீ., தொலைவிற்கு எந்த தபால்பெட்டியும் இல்லை. எனவே, தபால்களை அனுப்ப காட்டன் மார்க்கெட் தபால்நிலையம் வரை செல்ல வேண்டியிருந்தது. இப்பகுதியில் தபால் பெட்டி ஒன்று அமைக்க வேண்டி, பொதுமக்கள், 18 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் தபால் கோட்டம் சார்பில் வெள்ளியங்காடு நால் ரோட்டில் புதிய தபால் பெட்டி நேற்று நிறுவப்பட்டது.கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபிநாதன் தலைமையில், தபால் பெட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.இதையடுத்து, சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சேமிப்பு முகாம் துவங்கியது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து, சேமிப்பு கணக்கு துவங்கினர்.

தொடர்ந்து, வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.திருப்பூரில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நாளை வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு முதுநிலை கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.முன்னாள், தபால்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து, காட்டன் மார்க்கெட் தபால் அதிகாரி கார்த்திகேயன், உதவி கண்காணிப்பாளர் முத்துசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி ராமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X