பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பு வைத்து விழிப்புணர்வு

Added : ஜூன் 12, 2019
Advertisement
 அறிவிப்பு வைத்து விழிப்புணர்வு

சென்னை: 'புகைப்படம் எடுத்த, ஒரு மணி நேரத்திற்குள், லைசென்ஸ் வழங்கப்படும்' என, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
'விண்ணப்பதாரரை புகைப்படம் எடுத்ததும், ஒரு மணி நேரத்துக்குள், அவருக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும்' என, தமிழக போக்குவரத்து துறை கமிஷனர், சமயமூர்த்தி, ஆர்.டி.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆர்.டி.ஓ.,க்கள், அதை முழுமையாக கடைப்பிடிக்காததை கண்டறிந்து, இந்த உத்தரவை, அறிவிப்பாக வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, பெரும்பாலான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், தற்போது, இது குறித்த அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.அவற்றில், 'வாகன உரிமம் என்ற, ஆர்.சி., புக் மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல் உள்ளிட்ட, அனைத்து பணிகளையும், இணையதளத்தில் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

'விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 'போக்குவரத்து அலுவலகங்கள், கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், பிற அலுவலகங்களிலிருந்து, தடையில்லா சான்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. 'ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது, மொபைல் போன் எண், ஆதார் எண், இ - மெயில் முகவரி ஆகியவற்றை, தவறாமல் குறிப்பிட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X