பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு சட்ட உதவி: சார்பு நீதிபதி விழிப்புணர்வு பேச்சு

Added : ஜூன் 13, 2019
Advertisement
 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு சட்ட உதவி: சார்பு நீதிபதி விழிப்புணர்வு பேச்சு

திருப்பூர்:உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு - 'சைல்டு லைன்', தொழிலாளர் நலத்துறை மற்றும், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, சைல்டு லைன் மாநகர ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பாபு வரவேற்றார்.

மரியாலயா இளம்பெண்கள் மறுவாழ்வு மையத்தினர் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நாடகத்தை, பள்ளி மாணவிகள் முன்பு அரங்கேற்றினர்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர் மற்றும் சார்பு நீதிபதி தீபா பேசியதாவது:குழந்தை பருவத்தில் கிடைக்க வேண்டிய தரமான கல்வி, உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அனைத்தும் மாணவி களான உங்களுக்கு கிடைத் துள்ளது.

அடிப்படை தேவைகளான இவைகள் கிடைக்காத, பொருளாதார சூழ்நிலையாலும், பெற்றோர் களாலும் சுற்று உள்ள சமூக அமைப்பாலும் பல குழந்தைகள் தொழிலாளர்களாக தள்ளப்படு கின்றனர்.வருங்கால சந்ததிகளான நீங்கள்தான் இந்த அவலத்தை போக்க முன்வர வேண்டும். சுற்றுப்புறத்தில் சக குழந்தைகள் இதுபோன்ற அவலங்களை சந்திப்பதை கண்டால், உடனே, 1098 எனும் சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து விபரங்களை சொல்லலாம்.

எங்கள் சட்டப்பணிகள் ஆணை குழுவிலும் மனு அளிக்கலாம். குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற் காக திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு எல்லா வகையிலும் சட்ட உதவிகளை வழங்க எந்நேரமும் தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இறுதியாக, 'ஹேண்ட் இன் ஹேண்ட்' திட்ட ஒருங்கிணைப்பாளர் துாய வன் நன்றியுரை வழங்கினார்.

மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பிரேமா, மரியாலயா இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மறுவாழ்வு மைய இயக்குனர் லுார்து சகாயம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பூர், போயம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ரொசாலி, ''பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். 9 வயது முதல், 18 வயதிற்குள் இருக்ககூடிய குழந்தைகள் வேலைக்கு சென்றால் அவர்களை கண்டறிந்து, கல்வி கற்று கொடுக்க முன் வர வேண்டும்,'' என்று பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X