பொது செய்தி

தமிழ்நாடு

வரும், 19ல் சிண்டிகேட் கூட்டம்

Added : ஜூன் 13, 2019
Advertisement

சென்னை: அண்ணா பல்கலை எதிர்கொள்ளும், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க, வரும், 19ம் தேதி, சிண்டிகேட் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

தமிழக உயர்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அண்ணா பல்கலையில், துணைவேந்தராக, சுரப்பா பதவி ஏற்ற பின், பல்வேறு பிரச்னைகள் தலைதுாக்கி உள்ளன. முறைகேடுகள் மற்றும் அரசின் தலையீடுகளை குறைக்க, துணைவேந்தர் சுரப்பா, பல்கலை நிர்வாகங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினார்.இந்த முயற்சிகளுக்கு நடுவே, ஒரு தரப்பினர், துணைவேந்தரின் நடவடிக்கைகளை, தங்களின் சொந்த பிரச்னைகளுக்கு பயன்படுத்தி கொள்வதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதனால், பல்கலையின் நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் உயர்கல்வி துறைக்கு இடையே, பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான தேர்வு கட்டுப்பாட்டு துறை, பல்கலையின் நேரடி கல்லுாரிகளுக்கான கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், பதிவாளர் அலுவலகம், கல்லுாரிகளுக்கு இணைப்புகள் வழங்கும் இயக்குனரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில், பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.அதேபோல, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ளும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துடன், அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

அதனால், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் போன்ற பதவிகள், மாத கணக்கில் நிரப்பப்படவில்லை.பேராசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, துணைவேந்தரே முழு அதிகாரத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.இந்நிலையில், 'துணைவேந்தர் சர்வாதிகாரமாக செயல்பட முடியாது' என, உயர்கல்வி அமைச்சரும், உயர்கல்வி செயலரும், சமீபத்தில் எச்சரித்தனர். 'விரைவில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்' என்றும் கூறினர்.இதைத் தொடர்ந்து, வரும், 19ம் தேதி, சிண்டிகேட் குழுவை கூட்ட, உயர்கல்வி துறையும், அண்ணா பல்கலையும் முடிவு செய்துள்ளன.

இந்த கூட்டத்தில், பல்கலையின் பல்வேறு சிக்கல்கள் குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X