பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூருக்கு புதிய சி.இ.ஓ., இன்று பொறுப்பேற்பு

Added : ஜூன் 13, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் சாந்தா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சி, தஞ்சாவூர், துாத்துக்குடி, சென்னை, மதுரை, விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கான சி.இ.ஓ.,கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சி.இ.ஓ., சாந்தி கூறியதாவது:நாளைக்கு திருச்சியில் (இன்று) பதவியேற்கிறேன். என் அனுபவத்தில் சொல்லபோனால், மற்ற மாவட்டங்களை காட்டிலும், திருப்பூர் ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் பொறுப்பு அதிகமாக இருந்தது. நம் குழந்தைகள், நம்பள்ளி, நம் வேலை என்ற பிரியமாக வேலைகளை செய்தனர். இதனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்துவது எனக்கு எளிமையாக இருந்தது.

திருச்சியில் கல்வி கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை களப்பணி செய்த பின், மேற்கொண்டு செயலாற்ற உள்ளேன். திருப்பூர் தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மூன்றிலும் முதலிடத்தை தக்க வைக்க வேண்டும் என்பதே என் ஆசை.இவ்வாறு, அவர் கூறினார். திருப்பூரின் புதிய சி.இ.ஓ., வாக நியமிக்கப்பட்டுள்ள சாந்தா கடந்த, 2018 நவ., மாதம் தான் ஈரோடு மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்ட சி.இ.ஓ., வாக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X