பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் ஜமாபந்தி துவக்கம்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 சிதம்பரத்தில் ஜமாபந்தி துவக்கம்

சிதம்பரம்:சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் துவங்கிய ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து 128 மனுக்கள் பெறப்பட்டன.
சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில், நடந்த ஜமாபந்தியில், டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன் தலைமை தாங்கி, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.முதல் நாள் துவங்கிய ஜமாபந்தியில், ஒரத்துார் குருவட்டத்தை சேர்ந்த பூதங்குடி, சி.சாத்தமங்கலம், வெள்ளியக்குடி, வடபாக்கம், வாழக்கொல்லை 13 கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடம் இருந்து 128 மனுக்கள் பெறப் பட்டது.முதியோர் ஓய்வூதியம் கோரி 52 மனுக்கள், பட்டா கேட்டு 45 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில், சிதம்பரம் தாசில்தார் அரிதாஸ் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X