பொது செய்தி

தமிழ்நாடு

தேனீ வளர்ப்பு செயல்விளக்கம்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 தேனீ வளர்ப்பு செயல்விளக்கம்

கடலுார்:கடலுார் முதுநகர் அடுத்த காரைக்காடு கிராமத்தில் தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்கம் நடந்தது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) வேல்விழி தலைமை தாங்கி, விவசாயத்தில் தேனீக்களின் பங்களிப்பு, மகரந்த சேர்க்கை ஏற்பட அவைகள் பணியாற்றும் வீதம் குறி்த்து விளக்கினார்.வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகவன், வேளாண்மைத் துறை மூலமாக வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமையின் கீழ் தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்கம் நடத்தப்பட்டு தேனீ வளர்ப்பு பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதனை பராமரிக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறினார்.தேனி வளர்ப்பு நிபுணர் செல்வகுமார், தேன் சேகரிக்கும் முறைகள் குறித்து விளக்கி, தேனீக்கள் வளர்க்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தார். முன்னோடி விவசாயி காளிதாஸ் தென்னந்தோப்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆத்மா திட்ட மாவட்ட தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்ராஜ், கண்ணன், உதவி வேளாண்மை அலுவலர் பிரபாகரன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X