தமிழ்நாடு

தொழில் வளர்ச்சி மையம்! திருப்பூரில் அமைகிறது... பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019
Advertisement
 தொழில் வளர்ச்சி மையம்! திருப்பூரில் அமைகிறது... பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி

திருப்பூர்:திருப்பூர், கொல்கத்தா, லுாதியானா, சூரத் ஆகிய நகரங்களில், பின்னலாடை தொழில் வளர்ச்சி மையங்கள் திறக்கப்படுமென, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அறிவித்துள்ளதை, திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு பொறுப்பேற்ற பின், அமைச்சர் ஸ்மிருதி இரானி, நேற்று டில்லியில் தொழில்துறையினரை சந்தித்தார். ஒவ்வொரு தொழில் அமைப்புகளை சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், தலைவர் மேஹூ, துணை தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர், கோரிக்கைகளை முன்வைத்தனர்.குறிப்பாக, பனியன் தொழில் சார்ந்த கோரிக்கையை தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சில உத்தரவாதங்களை அறிவித்துள்ளார்.பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சிக்காக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

'ஸ்மர்த்' திட்டத்தில், ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அதற்காக, பின்னலாடை உற்பத்தி தொழிலாளர் பயிற்சிக்காக, 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும்.தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டப்) திட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த, நவீன மெஷின்களுக்கான வரிவிதிப்பு சலுகையாக, 'டப்' நிதி வழங்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 'டப்' நிதி, விரைவில் விடுவிக்கப்படும் எனவும், ஜவுளித்துறை அமைச்சரக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், கொல்கத்தா, லுாதியானா, சூரத் ஆகிய நகரங்களில், பின்னலாடை தொழில் வளர்ச்சி மையங்கள் திறக்கப் படும். பின்னலாடை தொழில் சார்ந்த கோரிக்கைகள், தேவைகளுக்கு, அதன் மூலமாக தீர்வு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு தேவையான விவரங்கள் குறித்த, கோரிக்கை பட்டியல், ஜவுளித்துறை அமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக, ஏ.இ.பி.சி., அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு குறித்து, 'பியோ' துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் வரவேற்பு வரவேற்கத்தக்கது. பின்னலாடை தொழில் மேலும், மேம்படுவதற்கான நல்ல வாய்ப்பாகவே இதனை கருத வேண்டும்,'' என்றார்.

பின்னலாடை மண்டலம்


திருப்பூர் 'டீமா' சங்க நிர்வாகிகள், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கொடுத்த கடிதத்தில்,'திருப்பூருக்கு பின்னலாடை மண்டலம் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும். திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.பின்னலாடை தொழில்துறைக்கு, நிதி சார்ந்த திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். திருப்பூரில், பருத்தி நுால் வங்கியை அமைக்க வேண்டும். தொழில்சார்ந்த பொது சேவை மையங்களையும் உருவாக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X