பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகள் புனரமைப்பு பணி நிலவரம்: அறிக்கை கேட்கிறார் அரசு செயலர்

Added : ஜூன் 13, 2019
Advertisement

நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை செயலர் அறிக்கை கேட்டுள்ளார்.

தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 89 அணைகள்; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், பாசனகால்வாய்கள் உள்ளன. இதில், குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக, ஏரிகள், பாசன கால்வாய்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.அணைகள் புனரமைப்பு திட்டம் வாயிலாக, அணைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலம் முழுவதும், ஓராண்டாக நடந்த, நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளில், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், புனரமைப்பு என்ற பெயரில், வரம்பு மீறி, ஏரிகளில் இருந்து, மணல் அள்ளப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

மேலும், கூவம், அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலை ஆறுகளில், அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டுள்ளது. பொதுப்பணி, வருவாய், போலீசார், கனிமவளத்துறையினர், இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.வறட்சியால் ஏரிகள் வறண்டுள்ள நிலையில், அவற்றை துார் வாராமல், பொதுப்பணித் துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர்.

இது குறித்த செய்திகளை, நமது நாளிதழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓராண்டாக நடந்துள்ள பணிகள், தற்போது நடந்து வரும் பணிகள் குறித்த விபரங்களை, அறிக்கையாக அளிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு, பொதுப்பணித் துறை செயலர், பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறை செயலரின் உத்தரவை அடுத்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், ஜெயராமன் வாயிலாக, இத்தகவல்களை சேகரிக்கும் பணிகள், இரண்டு நாட்களாக தீவிரமாக நடக்கின்றன.இந்த அறிக்கை, பொதுப்பணித் துறை செயலர் வாயிலாக, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X