பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு நிர்வாகிகள் பதவி பங்கு பிரிப்பு: துணை தலைவரானார் 'மாஜி' அமைச்சர் மனைவி

Added : ஜூன் 13, 2019
Advertisement

திருப்பூர்:அ.தி.மு.க., கோஷ்டிகளுக்கு இடையே நிலவிய, கூட்டுறவு பதவி பங்கீட்டு தகராறு முடிவுக்கு வந்துள்ளது. 'மாஜி' அமைச்சர் ஆனந்தன் மனைவி, துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நான்கு கூட்டுறவு சங்கங்கள் முக்கியமானவை. குமரன் கல்லுாரியை இயக்கும், திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், திருப்பூர் நகர கூட்டுறவு வங்கி, வளர்மதி கூட்டுறவு வங்கி, கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய சங்கங்களுக்கு, கடந்த ஆக., மாதம் தேர்தல் நடந்தது.

ஆளும்கட்சிக்குள் பதவி பங்கீட்டில் பிரச்னை ஒருபுறம் இருந்தது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சி களும் சேர்ந்து, ஜனநாயக ரீதியாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தக்கோரி, மற்றொருபுறம் தகராறு நடந்தது. கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில், தடியடி நடத்தும் அளவுக்கு, கூட்டுறவு தேர்தலில் களேபரம் நிகழ்ந்தது.வளர்மதி சங்க தேர்தல், சுமூகமாக பங்கீட்டுடன் முடிந்தது.

கூட்டுறவு விற்பனையாளர் சங்க தேர்தல், ஆளும்கட்சி கோஷ்டி மோதலால், பாதியில் நிற்கிறது. கூட்டுறவு நகர வங்கி மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், இயக்குனர் தேர்வு நடந்து முடிந்தது. தலைவர், துணை தலைவர் தேர்தல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 7 ம் தேதி, தலைவர், துணை தலைவர் பதவிக்கான ரகசிய தேர்வு, சத்தமின்றி நடந்து முடிந்துள்ளது.

கூட்டுறவு நகர வங்கி தெற்கு எம்.எல்.ஏ.,வுக்கு, குமரன் வீட்டு வசதி சங்கம், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு என, பங்கீட்டு கொண்டனர். திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் பதவி, மாவட்ட செயலாளர் ஆனந்தனின் உறவினர் வசந்திக்கு வழங்கப்பட்டுள்ளது; அவர் ஏற்கனவே, அந்த சங்கத்தின் தலைவராக இருந்தார். துணை தலைவராக, மாவட்ட செயலாளர் ஆனந்தனின் மனைவி லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கனவே இயக்குனராக இருந்தார்.திருப்பூர் நகர கூட்டுறவு வங்கியின் தலைவராக, தெற்கு எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர் சடையப்பன் தேர்வாகியுள்ளார். இவர், கடந்த முறை இயக்குனராக இருந்தார். சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்த கன்னியப்பன் என்பவர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'இரண்டு சங்கங்களில், பதவிகளை பங்கிடுவதில், இரண்டு கோஷ்டிகள் இடையே போட்டி நிலவியது; தற்போது, சுமூகமாக பங்கிட்டுக் கொண்டனர். நீண்ட நாள் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை.மாவட்ட செயலாளர், தனது குடும்பத்தாருக்கே, பதவிகளை வழங்கியுள்ளார். கூட்டுறவு விற்பனை சங்க பதவியை யும், தனது குடும்பத்துக்கு பெறுவதற்காகத்தான், போராட்டம்நடந்து கொண்டிருக்கிறது. யாருக்கும் வெளியே தெரியாமல், ஒருமனதாக நிர்வாகிகள் தேர்வாகியுள்ளதாக, அறிவிப்பு செய்த பிறகுதான், எங்களுக்கு தெரியவந்தது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X