பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகள் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன் சொல்கிறார் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி

Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 நீர் நிலைகள் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன்  சொல்கிறார் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி

திருவள்ளூர்: ''தமிழகத்தில், 2015ல் வீணானது போல, மீண்டும் ஒரு முறை மழை நீர் வீணாகக்கூடாது என நினைத்து, நீர்நிலைகளை துார்வாரும் பணியில், தீவிரம் காட்டி வருகிறேன்,'' என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், மகேஸ்வரி தெரிவித்தார்.நமது நாளிதழில், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றம்திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பூண்டி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் சீரமைக்கப்படாதது குறித்தும், சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஏரிகள் சீரமைப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, நமது நிருபரிடம் கூறியதாவது:மழை நீர் சேகரிப்பின் மகத்துவத்தை, 2015ல் பெய்த பெருமழை, என் ஆழ்மனதில் உணர்த்தியது. அதை, உள்வாங்கிக் கொண்ட நான், திருவள்ளூர் மாவட்டத்தில் பொறுப்பேற்றது முதல், ஒன்பது மாதங்களாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி மற்றும் பூந்தமல்லி ஆகிய எட்டு வட்டங்களில், நீர்நிலை புறம்போக்குகளில், 6,777 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் உள்ளதை கண்டறிந்தேன். வருவாய் உள்ளிட்ட, பல்வேறு துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டதில், இதுவரை, 674 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக, சென்னை உயர் நீதிமன்றம், எனக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.தடுப்பணைகள்நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், 2018 - 19ல், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 370 தடுப்பணைகள்; 338 கற்பாறை கொண்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. மாவட்டத்தில், 410 பண்ணை குட்டை; 85 ஆயிரத்து, 668 வரத்து கால்வாய்கள் சீரமைப்பு; மரக்கன்று மற்றும் மரங்களுக்கு இடையில், 1.90 லட்சம் சிறு அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக, மழைக்காலங்களில், ஆண்டு தோறும், 160 கோடி லிட்டர் மழைநீரை சேகரிக்க முடியும்.மேலும், 644 சிறு பாசன ஏரிகள், 3,126 குளங்கள் மற்றும் 106 ஊரணிகளில், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். புழல் ஏரியில், மிகைநீர் கால்வாய் சீரமைப்பு பணி, 10 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.'1.9 டி.எம்.சி., நீர் சேமிக்கலாம்'திருவள்ளூர் கலெக்டர், மகேஸ்வரி மேலும் கூறியதாவது:சோழவரம் ஏரியின், தற்போதைய கொள்ளளவு, 1,081 மில்லியன் கன அடி. கூடுதலாக, 134 மில்லியன் கன அடி, தண்ணீர் சேமிக்கும் வகையில், துார் வாரும் பணி நடந்து வருகிறது. இங்கு எடுக்கப்படும் வண்டல் மண்ணை விற்பனை செய்வதால், அரசுக்கு, 4.7 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.இதேபோல, செம்பரம்பாக்கம் ஏரி, புழல் மற்றும் பூண்டி ஆகிய நீர்த்தேக்கங்களிலும், துார் வாரி, கரையை பலப்படுத்த அரசாணை பெறப்பட்டு உள்ளது. இந்த நான்கு ஏரிகளிலும், பணிகள் நிறைவடைந்தால், நமக்கு தற்போது உள்ள, 11.25 டி.எம்.சி., அளவை காட்டிலும், கூடுதலாக, 1.9 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூன்-201912:47:51 IST Report Abuse
Bhaskaran முதலில் ஆக்கிரமிப்பாளர்களை உள்ளேதள்ளி எரிகுளம் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நீங்கள் கெட்டிக்காரர் அதைவிடுத்து வெறும் வாய்ப்பேச்சு எதுக்கு அம்மா எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப்போனாருன்னு
Rate this:
Share this comment
Cancel
S.Subramanian - Chennai,இந்தியா
13-ஜூன்-201911:17:36 IST Report Abuse
S.Subramanian மாவட்ட ஆட்சியாளர் அவர்களே....... உங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்டையை சுழற்றுங்கள். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு நல்லது செய்யுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். இறைவன் எப்போதும் துணையிருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
13-ஜூன்-201901:04:14 IST Report Abuse
Girija எப்போதிலேர்ந்து? இருக்கிற பவரை வைத்து அணைத்து அதிகரிகளையும் மந்திரிகள் எம் எல் ஏ களையும் சாட்டையால் விலாசமல்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X