பொது செய்தி

தமிழ்நாடு

'ஜாப் ஒர்க்' நிறுவனத்துக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., ரத்து செய்ய 'சைமா' சங்கம் வேண்டுகோள்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 'ஜாப் ஒர்க்' நிறுவனத்துக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி.,  ரத்து செய்ய 'சைமா' சங்கம் வேண்டுகோள்

திருப்பூர்:பனியன் சார்ந்த 'ஜாப் ஒர்க்' பில்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்களிக்க வேண்டுமென, சைமா சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

திருப்பூரில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த பனியன் நிறுவனங்கள், கிராமங்களுக்கும் பரவிவிட்டது. நகரில் இருந்து, 30 கி.மீ., சுற்றளவில் பனியன் தொழில் சார்ந்த, பனியன் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் செயல்படுகின்றன.கிராமத்தை சேர்ந்த இளம் தொழில் முனைவோர், சிறிய அளவில், கம்பெனி அமைத்து, பெண் தொழிலாளர்களை கொண்டு, பனியன் உற்பத்தி செய்கின்றனர்.

நகரில் உள்ள, உற்பத்தியாளர்களிடம் இருந்து, கட்டிங் செய்த பனியன் துணிகளை எடுத்துச் சென்று, ஆடைகளாக தைத்துக்கொடுக்கின்றனர்.பனியன் தொழிலில், 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். வெளியூரில் இருந்து தொழிலாளர்கள் வந்துசெல்ல, போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால், சிறிய நிறுவனங்கள், கிராமங்களில் முளைத்துவிட்டன.

கிராமப்புற ஏழை, எளிய பெண்கள், பனியன் உற்பத்தி செய்யும் இடத்தில், பணியாற்றி வருவாய் ஈட்டுகின்றனர். திருப்பூரில் உள்ள, பனியன் உற்பத்தியாளர்களும், கிராமப்புற மக்கள் பயன்பெறுகின்றனர் என்பதற்காக, முன்னுரிமை அடிப்படையில், பனியன் தைக்கும் ஆர்டர் வழங்குகின்றனர்.சொந்தக்காலில் நிற்கலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிலையம் இயக்கி வந்தவர்களுக்கு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, விரிவிதிப்பில் இருந்து விலக்களிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவதுகிராமப்புற பெண்கள், வீட்டுவேலை செய்த பிறகு, மீதி நேரத்தில் பனியன் உற்பத்தியில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி வந்தனர்.

விவசாய தொழில் மறைந்து வரும் நிலையில், 'ஜாப் ஒர்க்' பனியன் தொழிலில் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. சிறிய 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் கிராமங்களில் இயங்குகின்றன. ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டதால், 'ஜாப் ஒர்க்' நிறுவனத்தினர், நிலை குலைந்து போயுள்ளனர். எனவே, ஜி.எஸ்.டி., விரி விதிப்பில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.

பெண்கள் மிகவும் பயனடைந்து வருவதால், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் மற்றும் பனியன் சார்ந்த கூலி தொழில் 'பில்'களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்களிக்க, மத்திய அரசு கருணை காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X