பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் குடும்பத்துக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 போலீசார் குடும்பத்துக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர்:திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன், ரேவதி மெடிக்கல் சென்டர், அறக்கட்டளை சார்பில், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணா துவக்கி வைத்து, முதல் பரிசோதனை மேற்கொண்டார். ரேவதி மருத்துவமனை டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமையி லான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

மருத்துவ முகாமில், சர்க்கரை, ரத்தம், இருதய சுருள் படம், இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மேல் சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், வடக்கு, மகளிர், வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அலுவலக போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என, 70க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்ஸ்பெக்டர் விநாயகம் கூறுகையில், ''பணி, குடும்ப சூழல் போன்ற பல்வேறு காரணங்களால், போலீசார் தங்கள் உடலை சரியாக பராமரிக்காமல் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.இம்முகாமில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம், மாநகரம் போலீசார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X