பொது செய்தி

இந்தியா

தனியார் வல்லுனர்களுக்கு அரசு வேலை; மத்திய அரசு முடிவு

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி: தனியார் துறை வல்லுனர்களை, அரசு துறைகளில், குறிப்பிட்ட காலத்திற்கு பணியமர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.






பிரதமராக மோடி, ஐந்தாண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றதும், மத்திய அரசின் நிர்வாகத்தை மேம்படுத்த, பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனியார் துறையின் வல்லுனர்களை, குறிப்பிட்ட காலத்திற்கு, மத்திய அரசில் பணியமர்த்துவது என்பதும், அதில் ஒன்று. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுவரை, 15க்கும் மேற்பட்டோர், மத்திய அரசில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, கூடுதல் செயலர் அல்லது இயக்குனர் பதவி மற்றும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் துறை வல்லுனர்கள், 40 பேரை, கூடுதலாக அரசில் இணைக்க, மத்திய அரசு, அறிவிப்பு வெளியிட்டுள்ளது; இதற்காக, 6,077 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும், யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையம், தனியார் துறை வல்லுனர்களை தேர்ந்தெடுக்கிறது.





வழக்கமாக, இதுபோன்ற பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர், 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருப்பர். ஆனால், தனியார் துறையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களின் திறமை, அரசு துறைகளுக்கு அவசியம் என்பதால், தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயமில்லை என, மத்திய அரசு கருதுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
13-ஜூன்-201915:15:56 IST Report Abuse
Sridhar Rengarajan அதுல கோட்டா உண்டா அதைச்சொல்லுங்க மொதல்ல.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜூன்-201914:13:37 IST Report Abuse
J.Isaac அவுட்சோர்ஸ் பண்ணவேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
13-ஜூன்-201913:31:33 IST Report Abuse
TamilArasan இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு... எனது உறவினர் ஒருவர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து தற்போது இந்தியாவில் வந்து நாட்டிற்கு சேவை செய்ய விரும்பி வந்துள்ளார் - அவருக்கு பணம் ஒரு பொறுப்பில்லை அவரிடம் ஏராளம் உள்ளது, அவரும் இந்த பணிக்காக விண்ணப்பித்ததுள்ளார், அவர் என்னிடம் கூறியது எனக்கு பொறுப்பு கிடைத்தால் மாத ஊதியம் வாங்காமல் பணிபுரியாவும் தயாராக இருப்பதாய்... அவர் UAE அரசின் மின்சார துறையில் சீனியர் என்ஜினியர் மற்றும் டிபார்ட்மென்ட் தலைவராய் சுமார் 20 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X