பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரியில் மாதிரி பள்ளி துவக்கம்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 புவனகிரியில் மாதிரி பள்ளி துவக்கம்

புவனகிரி:புவனகிரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாதிரி பள்ளியை மாவட்ட கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை துவக்கிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நடப்புக் கல்வியாண்டில் புவனகிரி மற்றும் கீரப்பாளையம் வட்டாரத்தில் எட்டு ஆங்கில வழிப் பள்ளிகள் கடந்த 3ம் தேதி துவக்கப்பட்டது.புவனகிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த மாதிரி பள்ளி துவக்க விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். கல்விக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.வடலுார் மாவட்ட கல்வி அலுவலர் ராஜசுந்தரி, 50 மாணவர்களுடன் கூடிய மாதிரி பள்ளியில் ஆங்கில வழி வகுப்பை துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், சீருடை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X