பொது செய்தி

தமிழ்நாடு

சக்கர நாற்காலி வழங்க தாமதம்:

Added : ஜூன் 13, 2019
Advertisement

திருப்பூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு, 'பேட்டரி' பொருத்திய, 'எலக்ட்ரிக் வீல் சேர்' வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாரியாக, பல்வேறு நல உதவிகள் வழங்கப்படுகிறது. மாதாந்திர உதவி, பராமரிப்பு உதவி, இலவச பஸ் பாஸ், செயற்கை அவையங்கள், கண் கண்ணாடி என, பயனுள்ள வகையில் நலஉதவி வழங்கப்படுகிறது.நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், சக்கர நாற்காலி அல்லது மூன்று சக்கர சைக்கிள் அல்லது டூ வீலர் வழங்கப்படுகிறது.

இதில், முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'ஸ்பெஷல்' சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.மத்திய அரசு திட்டத்தின் வாயிலாக, மாற்றுத் திறனாளிகள் சிரமத்தை உணர்ந்து, 'பேட்டரி' பொருத்திய சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளது. சிறிய ரக மோட்டார் பொருத்தி, சக்திவாய்ந்த 'பேட்டரி' மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் அமரும் நபரே, எளிதாக இயக்கிக்கொள்ளலாம்; யாருடைய உதவியும் தேவையில்லை. அதிகபட்சமாக, மணிக்கு ஆறு கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதாக கையாள வசதியாக, மடக்கி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரை இல்லாத அளவுக்கு, கால் வைக்கும் பகுதி, சாய்ந்து அமரும் பகுதிகளை, தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே, திருப்பூர் மாவட்டத்துக்கு, 30 'எலக்ட்ரிக் வீல் சேர்' வந்துவிட்டன. தேர்தல் முடிந்ததும், விரைவாக வழங்கப்படுமென, மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்த்தனர். இருப்பினும், பயனாளிகள் தேர்வில் இழுபறி நீடிப்பதால், அரசு உதவி மாற்றுத் திறனாளிகளை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாற்றத்திறனாளிகள் நல அலுவலர்களிடம் கேட்டபோது, 'எலக்ட்ரிக் வீல் சேர்' கேட்டு, பலரும் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்துக்கு, 30 'வீல்சேர்' வந்துள்ளது. தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தேவைப்படுபவர்கள், நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் தேர்வு முடிந்ததும், நல உதவி வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X