பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய வளர்ச்சி பணி: கலெக்டர் திடீர் ஆய்வு

Added : ஜூன் 13, 2019
Advertisement

பொங்கலூர்:பொங்கலூர் ஒன்றிய வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், கண்டியின் கோவில் ஊராட்சி தாயம் பாளையம் அரசு துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர், தெற்கு அவினாசிபாளையம் சாரதா நகரில் கட்டப்பட்டுள்ள தனிநபர் இல்ல கழிப்பிடம், வடமலை பாளையம் ஊராட்சி வேலப்ப கவுண்டம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, புத்தரசல் அங்கன்வாடி மையம், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தமிழக அரசு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொடுவாய் நாச்சிபாளையம் ரோடு முதல் ஆண்டிபாளையம் வரை உள்ள தார் ரோடு அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் கீழ், நாத கவுண்டம்பாளையத்தில் தார் ரோடு அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு, கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்.

இவற்றின் மொத்த மதிப்பு 161. 06 லட்சம் ரூபாய். முன்னதாக பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் கால்நடை களுக்கான நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், செயற்பொறியாளர் பிரேம்குமார்,பி.,டி.ஓ.,, மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X