அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஹிந்தி எதிர்ப்புக்கு
வரலாறு காரணம்: ஸ்டாலின்

கோவை: ''இப்போதைய இளைஞர்களின் ஹிந்தி எதிர்ப்புக்கு, தி.மு.க., வின் கடந்த கால வரலாறு தான் காரணம்,'' என, கோவையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஹிந்தி,எதிர்ப்பு,வரலாறு காரணம்,ஸ்டாலின்



தி.மு.க., மூத்த தலைவர்கள், ராமநாதன், சுப்பையன் படத்திறப்பு விழா கோவையில் நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது: பிரதமராக மோடி, இரண்டாவது முறையாக, பொறுப்பேற்ற பின், மும்மொழி கல்வி வரைவு திட்டத்தை தயாரித்துள்ள செய்தி வந்தது. கடந்த கால தமிழக

வரலாறு மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை, அவர்கள் உணர்ந்து பார்க்க தவறி விட்டனர்.


இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்தனர். தி.மு.க., உருவாக்கிய வரலாற்றால், எழுந்த விளைவு அது. அதனால், மீண்டும் ஒரு போராட்டத்துக்கு எங்களை ஊக்குவிக்காதீர்கள் என, மத்திய அரசை நோக்கி சொன்னேன். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், முக்கிய பங்காற்றிய இரு தலைவர்களின் படங் களை, இந்த சூழ்நிலையில் திறப்பது, பொருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

உங்களுக்குன்னா தக்காளி சட்னியா?
ஓராண்டுக்கு முன், கோவையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது. அப்போது, அவிநாசி சாலையில், 'ஹோப் காலேஜ்' அருகே, அ.தி.மு.க., சார்பில், அலங்கார வளைவு வைக்கப்பட்டது. இதில், நள்ளிரவு நேரத்தில் மோதி, பைக்கில் சென்ற இன்ஜினியர் ரகு பலியானது, பரபரப்பாக பேசப்பட்டது.இந்த விவகாரத்தை கையில் எடுத்த,

Advertisement

தி.மு.க., அலங்கார வளைவு வைத்த, அ.தி.மு.க.,வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. நேற்று, கோவை வந்த ஸ்டாலினை வரவேற்பதற்காக, ரகு இறந்து போன, அதே அவிநாசி சாலையில், ஹோப் காலேஜில் இருந்து, நிகழ்ச்சி நடந்த மீனாட்சி ஹால் வரை, சாலையில் குழிகள் தோண்டி, வரிசையாக, தி.மு.க., கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. 'அடுத்த கட்சியை குறை சொல்லும், தி.மு.க.,வினர், முதலில் தங்களை திருத்திக் கொள்ள வேண்டாமா?' என, பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.



Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varipuli - VaigaiCity,இந்தியா
14-ஜூன்-201920:14:57 IST Report Abuse

Varipuliநீ அரசியல் செய்ய ஹிந்தி எதிர்ப்பு தான் கிடைத்ததா, தமிழ்நாட்டிலே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, அதுக்காக எவனும் பேசக்கானாம் , 37vetti எம்பிக்கைகளை வைத்துகொண்டு உன்னாலே தமிழ்நாட்டுக்கு என்ன பிரயோஜனம்?

Rate this:
oce - chennai,இந்தியா
14-ஜூன்-201916:01:05 IST Report Abuse

oceஹிந்து மதத்தினருக்காக, ஏதாவது சிறப்பு செய்வதாக, உங்கள் கட்சிக்கு எண்ணம் உள்ளதா? தமிழக ஹிந்துக்கள் வழிபடுவதற்காக, மாமல்லபுரம் அருகில், 300 ஏக்கரில், 100 கோடி ரூபாய் செலவில், தி.மு.க., சார்பில், வெங்கடாசலபதி கோவில் கட்டப்படும். இதற்கான, முழு செலவையும், தி.மு.க., ஏற்கும். இது, தென் திருப்பதி என்று அழைக்கப்படும். ஆந்திராவில் உள்ள திருப்பதி போல், தென் திருப்பதியில், பக்தர்களுக்காக, எல்லா வசதிகளும் செய்யப்படும்.

Rate this:
saravan - bangaloru,இந்தியா
13-ஜூன்-201918:46:25 IST Report Abuse

saravanஇந்த இந்தி எதிர்ப்பு தன உங்களை முதலமைச்சர் ஆகாமல் தடுக்கப்போகிறது....இன்றைய நிலை வேறு....

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X