பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளிக்கு கூடியது 'மவுசு' வரத்து குறைவு எதிரொலி

Added : ஜூன் 13, 2019
Advertisement
 தக்காளிக்கு கூடியது 'மவுசு' வரத்து குறைவு எதிரொலி

உடுமலை:வரத்து குறைவு மற்றும் முகூர்த்த சீசன் காரணமாக, தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உடுமலை சுற்றுப்பகுதியில், தக்காளி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. கோடை காலத்தில், நீர் பற்றாக்குறை காரணமாக, சாகுபடி பரப்பு குறையும். நடப்பாண்டு, அதிக வெயில் காரணமாக, குறைந்தளவு சாகுபடி செய்த விளைநிலங்களிலும், செடிகள் பாதிக்கப்பட்டது. இதனால், தக்காளி வரத்து சந்தைக்கு வெகுவாக குறைந்தது. இந்நிலையில், முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், தேவையும் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக, 13 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, 500 ரூபாய்க்கு விவசாயிகளிடம்
இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியதும், சாகுபடி பரப்பு அதிகரித்து, வரத்து சீராகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், உடுமலை பகுதியில், மழை தீவிரமடையாமல், ஏமாற்றி வருகிறது.

எனவே, ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களிலுள்ள செடிகளிலும் காய்ப்பு குறைந்துள்ளது. சில வாரங்களுக்கு, தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X