பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில்ஜவகர் பள்ளி சாதனை

Added : ஜூன் 13, 2019
Advertisement

நெய்வேலி:'நீட்' தேர்வில் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் 45 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன், நெய்வேலி ஜவகர் கல்விக் கழகமும், நெய்வேலி தெலுங்கு கலாச்சார சங்கத்தின் கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து, நெய்வேலி வட்டம் 5ல் ஜவகர் சி.பி.எஸ்.இ., சிறப்பு மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில் பயில நடத்தப்படும் 'நீட்' தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியும் பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில் (2019 ) நடத்தப்பட்ட 'நீட்' தேர்வினை இப்பள்ளி மாணவர்கள் 58 பேர் எழுதிய நிலையில், 45 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளி மாணவர் லோக்கேஷ், 720க்கு 573 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். ஏழு பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 25 பேர் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்று, தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பயிலும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X