அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி
முதல்வர் பேச்சு

சென்னை: 'லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து களைந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்பதால் மக்கள் பிரச்னைகளை தீர்த்து வெற்றி பெறுவோம்' என முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்,admk,அதிமுக,தனித்து போட்டி?


சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் அவை தலைவர் மதுசூதனன் பேசுகையில் 'தேர்தல் தோல்வி குறித்து அமைச்சர்களின் கருத்தை மட்டும் கேட்காதீர்கள்; தொண்டர்களிடமும் கேளுங்கள். அவர்களின் குரலுக்கு செவி சாயுங்கள். அப்போது தான் வெற்றி பெற முடியும்' என தெரிவித்துள்ளார். மாநில நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பேசுகையில் 'நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்; நடக்க வேண்டியவை நல்லதாக நடக்கட்டும். தோல்வியை மறந்து வெற்றி பெற வழிவகுப்போம்' என்றனர்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தி.மு.க.வின் பொய் பிரசாரத்தால் லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவினோம்.

சட்டசபை தேர்தலில் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற முடியும். லோக்சபா தேர்தலில் மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகளை கலந்தாலோசித்தே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்; எந்த தவறும் செய்யவில்லை. எனினும் வெற்றி கிடைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் மக்கள் நமக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

எனவே அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். பா.ஜ. கூட்டணி தொடரும். தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து அதை களைந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி உள்ளாட்சி தேர்தல் நடக்கும். எனவே மக்கள் பிரச்னைகளை தீர்த்து வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: தேர்தல் தோல்வி குறித்து கவலைப்படாமல் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சிப்போம். கட்சி நிர்வாகிகளிடம் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க 11 பேர் கொண்ட வழிகாட்டி குழு அமைக்க வேண்டும். அதை 15 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். நாங்கள் மக்கள் தலைவர் இல்லை; அடிமட்ட தொண்டர்கள். ஜெயலலிதா மறைந்த நிலையில் கட்சியை வழிநடத்தி செல்கிறோம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

கருத்து சொல்ல தடை:

அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சி சார்பில் பத்திரிகைகள் ஊடகங்கள் மற்றும் பிற சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக கருத்துக்களை தெரிவிக்கும் பணிக்கு செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கட்சியின் நிலைப்பாடு அறிந்து கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். லோக்சபா பொதுத் தேர்தல் நடந்து முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் துவங்கி உள்ளன. இந்த வேளையில் செய்தி தொடர்பாளர்கள் கட்சி தலைமையில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும் பத்திரிகையிலும் சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்சி சார்பிலோ அல்லது கட்சி ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனி நபர்களை அழைத்து அ.தி.மு.க. பிரதிநிதிகளை போல சித்தரித்து கருத்துக்கள் வௌயிடுவதை ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம். அ.தி.மு.க.விற்கு ஒழுங்கும் கட்டுப்பாடும் இரு கண்களாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இதை மனதில் வைத்து கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-201920:55:26 IST Report Abuse

தமிழ்வேல் அப்புடியா ? நான் என்னவோ "உன்னால நான் கேட்டேன், என்னால நீ கேட்டேன்"னுல நெனச்சேன் . /// தி.மு.க.வின் பொய் பிரசாரத்தால் லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவினோம். ///

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-ஜூன்-201910:17:04 IST Report Abuse

நக்கீரன்ஏண்டா மக்கள் இன்னும் உங்கள நம்புவாங்கன்னு நினைசீங்கன்னா உங்கள மாதிரி அறிவிலிகள் யாரும் கிடையாது. நீங்க மக்களுக்கு என்னடா நன்மை செஞ்சீங்க உங்கள நம்புறதுக்கு? ஜெயாவின் அதிமுக தமிழ்நாட்டின் சாபக்கேடு.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-ஜூன்-201908:44:41 IST Report Abuse

தமிழ் மைந்தன்அட ஊழல்திமுக போல குடும்ப கம்பெனி யாக மாற்றப்பட்டு விட்டால் எந்த பிரச்சினையையும் எளிதாக சமாளிக்க முடியும்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X