பொது செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளம் - உடுமலைக்கு சிறப்பு பஸ் இயக்கினால் மாணவர்கள் சிரமம் குறையும்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 மடத்துக்குளம் - உடுமலைக்கு சிறப்பு பஸ் இயக்கினால் மாணவர்கள் சிரமம் குறையும்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் - உடுமலைக்கு மாணவர்களுக்கான தனி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் பகுதியிலிருந்து, தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடுமலைக்கு சென்று திரும்புகின்றனர். இவ்வளவு அதிகளவு மாணவர்கள் பயணிக்கும் போதிலும் இதற்கான பஸ்கள் இல்லை. வழக்கமான வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள் தான் உள்ளன.

பள்ளி மற்றும் கல்லுாரிக்கு பயணிக்கும் நேரமான காலை, 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரைக்கும், மடத்துக்குளம் உடுமலை வழித்தடத்தில் 12 முதல் 15 பஸ்கள் வரை இயக்கப் படுகிறது.இது போல் இயக்கப்படும் பஸ்கள், வழக்கமான பயணிகளுக்கே போதியதாக இல்லை. இதனால் நெருக்கடி, மற்றும் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

இந்தநிலையில் இவர்களுடன் மாணவர்களும் சேர்ந்து பயணிக்கும் போது, அதிக நெருக்கடி ஏற்படுவதால் மாணவர்கள் சோர்ந்து, தளர்ந்து விடுகின்றனர்.பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சில பஸ்களில் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. சராசரியாக, 80 முதல் 90 நபர்கள் ஒரு பஸ்சில் சராசரியாக செல்கின்றனர். மோட்டார் வாகன விதிப்படி 58 முதல் 60 பேர் தான் பயணிக்க அனுமதி உள்ளது.

ஆனால்,போதிய பஸ் இல்லாததால்,அரசு விதி முறைக்கு புறம்பாக ஓவர்லோடில் செல்கின்றன. இது போல் செல்லும் பஸ்களில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணிக்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.இதற்குத்தீர்வாக மடத்துக்குளம்- உடுமலை 15 கி.மீ., தொலைவுக்கு மாணவர்களுக்கான தனி பஸ் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X