கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அபராதம் விதிக்க எஸ்.ஐ.,க்கு அதிகாரம்
'ஹெல்மெட்' வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'ஹெல்மெட்' அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவும் அபராதம் விதிக்கவும் அனைத்து எஸ்.ஐ. க்களுக்கும் அதிகாரம் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராதம்,எஸ்.ஐ.,ஹெல்மெட்,ஐகோர்ட்,உத்தரவு


இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியும் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள்

எஸ்.மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதாடியதாவது: வாகன சோதனைக்கான புதிய அலைபேசி செயலியை 645 பேர் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை 96 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது உடனடி அபராதம் விதிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக போலீசாருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும். மேலும் சாலை பாதுகாப்புக்காக 2000 முதல் 2019 வரை 605 கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளது. இது தவிர உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி 2018ல் ஹெல்மெட் அணியாத 14 லட்சம் பேர்; 'சீட் பெல்ட்' அணியாத 39 லட்சம் பேர் மீது வழக்குகள்

Advertisement

பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாதம்தோறும் உயர்மட்ட ஆலோசனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஹெல்மெட் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவும் அபாரதம் விதிக்கவும் அனைத்து பிரிவு எஸ்.ஐ. க்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும். மேலும் அபராத தொகையை 150 சதவீதம் உயர்த்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. இவ்வாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (20+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூன்-201916:20:28 IST Report Abuse

Endrum Indianஇந்த போட்டோவில் காண்பித்ததை போலத்தான் இங்கும் நடக்கின்றது அதுவும் கொல்கத்தாவில் மற்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லையென்றால் உடனே பெனால்டி / Fine, ஆனால் இந்த துலுக்கனும், துலுக்கச்சியும் இப்படி போனால் அவர்களை பிடிக்க மாட்டார்கள், ஏன் இது தான் முஸ்லீம் பேகம் மும்தாஜ் ஆட்சி நடக்கும் இடமல்லவா???

Rate this:
jeans bala - CHENNAI,இந்தியா
13-ஜூன்-201915:01:05 IST Report Abuse

jeans balaமுதல்லே ஷேர் ஆட்டோக்களை நிறுத்துங்க ஓவர் கிலோமீட்டருக்கு ரூபா 15 வாங்குகிறான் ஓவர் லோடு பெண்களையும் ஆண்களையும் ஒன்றாக உட்கார வைத்து விடுகிறான் காக்கி சட்டை போடுவது கிடையாது பாக்கு அது எல்லோரும் போடுவார்கள் ஆனால் துப்பிக்கொண்டே ஆட்டோவை ஓட்டுவார்கள் லைசன்ஸ் கிடையாது வண்டி பெர்மிட் கிடையாது ஓவர் ஸ்பீட் இதை கண்டுக்காமல் மாமூல் வாங்கும் போலீஸ் ஹெல்மெட் மீது ஆசை வந்துவிட்டது

Rate this:
raja - ariyalur,இந்தியா
13-ஜூன்-201913:29:27 IST Report Abuse

rajaதலை கவச விவகாரத்தில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறது நீதி துரை, குண்டும் குழியுமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்கள் ஏத்தனை எத்தனை , கிராம சாலைகளில் ஆறு மாதத்திற்கும் மேலாக ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையின் ஜல்லிகளை முழுவதும் பெயர்த்துவிட்டு சாலை அமைக்கவில்லை . இது பல இடங்களில் தற்போதும் நீடிக்கிறது.எனது சொந்த கிராமம் சாலக்கரை, பெரியகிருஷ்ணாபுரம் ,ஆண்டிமடம் வட்டம் , அரியலூர் மாவட்டம் , இங்கும் ஆறு மாதமாக ஜேசிபி கொண்டு தோண்டிய சாலை இன்று வரை கவனிக்கப்படவில்லை, வேலை எடுத்தவர் தோண்டியதோடு சரி பல முறை தொடர்பு கொண்டும் சரி செய்யவில்லை , தினமும் ஆயிரத்திற்கும் மேலான பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்லும் சாலை இது தினமும் விபத்துகளை அள்ளித்தரும் இதுபோன்ற சாலைகளை கடக்கும் மக்கள் என்ன இழிந்த வாயர்களாக தெரிகிறது போல இந்த கான்ட்ராக்டர்ஸ்க்கு ,,,, இதற்கான தீர்வுகளை நீதியரசர்கள் நினைத்தாள் தீர்த்து வைக்க இயலுமா ,,, நான் சொன்ன இந்த கருத்து 100 உண்மையாகும் ,,, எனது அலைபேசி 9629624327, சாலக்கரை கிராமத்திலிருந்து s.d.ராஜா .... தலை கவசம் அணிவது அவரவர்க்கு நல்லது , பெரும்பான்மை மக்கள் அணிவதில்லை , இதனால் வெகு சிலர் பயன்படுத்தும் போது நாம் மட்டும் அணிகிறோம் என்ற எண்ணம் தோன்றும் 24 மணி நேரமும் கண்காணித்தல் நிரந்தர தீர்வாகும் ,,,,

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X