பொது செய்தி

தமிழ்நாடு

கனரக வாகன ஓட்டுனர்களுக்கு 'டீ' கொடுத்து விழிப்புணர்வு

Added : ஜூன் 13, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கனரக வாகன ஓட்டுனர்களுக்கு, 'டீ' கொடுத்து, அறிவுரைகள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஊர்க்காவல் படை, பொள்ளாச்சி உட்கோட்ட போலீஸ் இணைந்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.இரவு நேரங்களில் ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், பொள்ளாச்சியை கடக்கும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு, 'டீ' மற்றும் அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் நடந்தது.

ஊர்க்காவல் படை பிரேதச தளபதி பாலாஜி ராஜூ, பொள்ளாச்சி டி.எஸ்.பி., சிவக்குமார், கிழக்கு இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நள்ளிரவு, 2:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை, கனரக வாகன ஓட்டுனர்களுக்கு 'டீ' வழங்கி, விபத்தில்லா பயணம், விபத்தில்லா சாலைகளை உருவாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ''வாகன ஓட்டுனர்கள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். தொழிலாளர் தவறு செய்தால் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஓட்டுனர்கள் தவறு செய்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்காது. அதற்குள் விபத்து ஏற்பட்டு விடும். எனவே, வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், போலீஸ் மற்றும்,ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, பொள்ளாச்சி ஊர்க்காவல் படைப்பிரிவு தளபதி பழனிசாமி, உதவி படைப்பிரிவு தளபதி சித்தார்த்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X