ரூ.98,000 கோடி மோசடியா? 'இந்தியாபுல்ஸ்' புதிய மனு

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (25)
Advertisement

புதுடில்லி: 'பொதுமக்களிடம் இருந்து பெற்ற முதலீடுகளில், 98 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, 'இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்' நிறுவனம், புதிய மனு தாக்கல் செய்துள்ளது.






கட்டுமானத் துறைக்கு நிதி அளிக்கும், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், 98 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, சமீபத்தில் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள, அபய் யாதவ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சமீர் கெலாட் மற்றும் அவருடைய குடும்பத்தார், ஸ்பெயினைச் சேர்ந்த, என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மூலம், பல போலி பெயர்களில் நிறுவனங்களை துவக்கியுள்ளனர். அந்த நிறுவனங்களுக்கு, இந்தியாபுல்ஸ் நிறுவனம் கடன் கொடுத்துள்ளதாக ஆவணங்கள் தயாரித்துள்ளனர். கடன் வாங்கிய அந்த நிறுவனங்கள், அந்தப் பணத்தை, சமீர் கெலாட் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் கணக்குகளுக்கு மாற்றியுள்ளன.

இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து முதலீடுகள் பெற்றுள்ள, இந்தியாபுல்ஸ் நிறுவனம், 98 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதைத் தவிர, 1,700 கோடி ரூபாய் கறுப்பு பணம், இந்த போலி நிறுவனங்கள் மூலம், வெள்ளை ஆக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் முதலீட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.





இந்நிலையில், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அடங்கிய, கோடை விடுமுறை கால உச்ச நீதிமன்ற அமர்வில், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஏ.எம். சிங்வி, புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது: இந்தியாபுல்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விபரம், பத்திரிகைகளில் வந்துள்ளது. அதனால், நிறுவனத்துக்கு, 7,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டு, பொய் வழக்கு. அதனால், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். முழு ஒத்துழைப்பையும் அளிக்க, நிறுவனம் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
13-ஜூன்-201921:49:44 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அரஜண்ட் கேஸ் பீஸ் வக்கீல் வாங்கிட்டார் போல் தெரிகிறது. அதாங்க விஷயம் . சட்டமும் கோர்ட்டும் நீதியும் ஒரே கோட்டில் செல்லுதுன்னு சொல்லலாம். நெறுப்பு இல்லாம புகையாதுண்ணு ஓர் பழமொழி உண்டுங்க. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற பழமொழியும் இல்லாமல் இல்லை . அனுபவசாலிகள் கண்ட உண்மை வாக்குங்க. ............
Rate this:
Share this comment
Cancel
jeans bala - CHENNAI,இந்தியா
13-ஜூன்-201914:41:33 IST Report Abuse
jeans bala இண்டியாபுல்லஸ் ஏமாற்றும் கம்பெனி ஹவுஸ் லோன் interest கட்டியே நான் ஓட்டாண்டி ஆகிவிட்டேன் மேலும் மொத்த பணம் கட்டிய பிறகு இன்சூரன்ஸ் கான்செல் செய்து அவர்கள் இண்டியாபுல்லஸ் கம்பனிக்கு நெப்ட் செய்கிறார்கள் அமௌன்ட் வந்தவுடன் சொல்வது இல்லை ஆட்டையை போடுகிறார்கள் மிக மோசமான ஹோம் பைனான்ஸ் கம்பெனி indiabulls
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
13-ஜூன்-201913:55:33 IST Report Abuse
partha எல்லா திருடர்களுக்கும் காங்கின் அபிஷேக் சிங்விதான் வக்கீல் யோகியர்களின் கட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X