பொது செய்தி

தமிழ்நாடு

தபால் துறை: புகைப்பட போட்டி

Added : ஜூன் 13, 2019
Advertisement

பொள்ளாச்சி:சுதந்திர தினத்தை முன்னிட்டு, தபால்துறை சார்பில் 'நவீன இந்தியாவின் காந்திய பாரம்பரியம்' எனும் தலைப்பில், புகைப்பட போட்டி நடக்கிறது.

பொள்ளாச்சி தபால்துறை கண்காணிப்பாளர் அறிக்கை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு தழுவிய புகைப்பட போட்டியை தபால்துறை நடத்துகிறது. இதற்காக, 'நவீன இந்தியாவில் காந்திய பாரம்பரியம்' எனும் தலைப்பில், புகைப்படங்கள் போட்டிக்கு வரவேற்கப்படுகிறது. புகைப்படமானது போட்டியில் பங்கேற்பவரே எடுத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட புகைப்படம் அச்சு ஊடகத்திலோ, இணையதளத்திலோ பிரசுரமாகியிருக்க கூடாது. வயது வரம்பின்றி, இந்திய குடிமக்கள் யாவரும் போட்டியில் பங்கேற்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படம், சிறப்பு தபால்தலையாகவோ, தபால்தலை சேகரிப்பு பொருட்களிலோ வெளியிட வாய்ப்பு அதிகம் உள்ளது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களுக்கு முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம்; மூன்றாவது பரிசாக, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறுதல் பரிசாக, ஐந்து பேருக்கு தலா, ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

போட்டிக்கான விண்ணப்பங்கள், www.indiapost.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.போட்டிக்குரிய புகைப்படங்கள் வரும், 30ம் தேதிக்குள் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரல், அறை எண்:108, தக் பவன், பார்லிமென்ட் வீதி, புதுடில்லி - 110 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X