பொது செய்தி

தமிழ்நாடு

மழை காலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை! மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் உறுதி

Added : ஜூன் 13, 2019
Advertisement
 மழை காலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை! மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் உறுதி

ஆனைமலை:''மழைக்காலம் துவங்குவதால், மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் ஏற்படாமல் இருக்க, சுகாதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, கலெக்டர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அடுத்த சமத்துார் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று, மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில், ஆனைமலை தாலுகாவுக்கான மனு நீதி நாள் முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட துணைக்கலெக்டர் அமுதன், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், கோட்டூர் வருவாய் ஆய்வாளர் காயத்ரி பங்கேற்றனர்.
இதில், வேளாண், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, மின்வாரியம், போலீசார் உள்பட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.நலத்திட்ட உதவிமுகாமில், முதியோர் உதவித்தொகை கேட்டு, 73 மனுக்கள், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, 95; இதர மனுக்கள், 30, என, மொத்தம், 202 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஒரு மனுதாரருக்கு 'வீல் சேர்' வழங்கி தீர்வு காணப்பட்டது.வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பிலும், பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, இலவச வீட்டுமனை பட்டா என, 59 பேருக்கு, 7.71 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும், வேளாண், வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சிகள், சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்து.ரூ.100 கோடியில் பணிகலெக்டர் பேசியதாவது:

மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டுமென்ற நோக்கத்தில், மனு நீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் மக்கள் தெரிவித்த அனைத்து புகார்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படும். அரசு சார்பில் மக்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வீடு இல்லாதவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா, பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில், கல்வி உதவித் தொகை, விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. ஊரக வேலை உறுதி திட்டத்தில் கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு, 85 கோடி ரூபாய்க்கு, மேம்பாட்டு பணிகள் நடந்தது.இதில், சூழலை காக்க மரங்கள் நடவு, விவசாயிகளுக்காக வரப்பு, பண்ணைக்குட்டைகள் கட்டப்பட்டன. இதனால், கிராமப்புறத்தில் வேலையில்லாத மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
நடப்பாண்டுக்கு, கோவை மாவட்டத்துக்கு நுாறு கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்கும். மழைக் காலம் துவங்குவதால், மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் ஏற்படாமல் இருக்க, சுகாதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு, பேசினார்.
ஐயா... சுகாதாரமில்லீங்க!

பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'சமத்துாரில் நிலவும் குடிநீர் பிரச்னையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பேரூராட்சி முழுவதும் குடியிருப்பு பகுதிகளில், குப்பைகள் குவிந்து சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.எஸ்.பொன்னாபுரம் கிராமத்தில் பொதுக்கழிப்பிடங்கள் சுகாதாரம் இன்றி உள்ளது. அடிப்படை வசதிகளில் பிரச்னைகள் நிலவுகிறது. சூளேஸ்வரன் பட்டியில் நாய்க்கன்பாளையம் ரோட்டில் கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதாரம்
பாதிக்கிறது,' என, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X