பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய மின் சக்தி சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா ?

Added : ஜூன் 13, 2019
Advertisement

சென்னை:பயன்பாடற்ற மின் சேமிப்பு கலனால், மின் தடை நேரங்களில், சிக்னல் இயங்குவது இல்லை. அந்த நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு, சூரிய சக்தியால் இயங்கும் சிக்னல், பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, 350க்கும் மேற்பட்ட சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பழுதுமின் தடை ஏற்படும் நேரங்களில், சிக்னல்கள் தடையின்றி இயங்கும் வகையில், அனைத்து சிக்னல்களிலும், இரண்டு பேட்டரியுடன், மின் சேமிப்பு கலனுடன் கூடிய கருவிகள் அமைக்கப்பட்டு இருந்தன.ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், அவை பயன்பாடின்றி பழுதடைந்து கிடக்கின்றன.

இது குறித்து அறிந்தும், காவல் துறை மேல் அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர் என, வாகன ஓட்டிகள், புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, அண்ணா சாலை --- வாலாஜா சாலை சந்திப்பு சிக்னலில் அமைக்கப்பட்ட, மின் சேமிப்பு கலன் பழுதாகி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகின்றன.அதை சீரமைக்காததால், மின் தடையின் போது, வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்துக்குள்ளாகின்றன.

மேலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சென்னை முழுவதும் உள்ள சிக்னல்களில், பேட்டரியுடன் கூடிய, மின் சேமிப்பு கலன் அமைக்க வேண்டும் அல்லது முன், சூரிய சக்தியால் இயங்கும் சிக்னல்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அப்படி வரும் பட்சத்தில், மின்சாரமும் சேமிக்கப்படுவதோடு, மின் தடை நேரங்களில், பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், போக்குவரத்து போலீசாருக்கு எளிதாக இருக்கும் என்கின்றனர், வாகன ஓட்டிகள்.நடவடிக்கைஇது குறித்து, போக்குவரத்து ஆய்வாளர் கூறியதாவது:சிக்னல்களில் ஏற்படும் கோளாறுகளை சீரமைத்து தருவதற்காக, கமிஷனர் அலுவலகத்தில், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளனர்.

அவர்கள், சிக்னல்களில் பழுதடைந்துள்ள, உதிரி பாகங்களை மாற்றுவதற்காக, எங்களிடம் பணத்தை வாங்குகின்றனர். மின் தடை ஏற்படும் நேரங்களில், நாங்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறோம்.மிகவும் அகலமான சாலை என்றால், வாகனங்கள் எப்படி வருகின்றன என்பதை, கணிக்கவே முடியாது. ஒவ்வொரு நாளும், உயிரை பணயம் வைத்து, பணிபுரிந்து வருகிறோம். உயர் அதிகாரிகள், சிக்னல்களில், மின் சேமிப்பு கலன் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X