பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சியில் குவிந்து கிடக்கும் பிரச்னைகள் கண்டுகொள்வார்களா அதிகாரிகள்

Added : ஜூன் 13, 2019
Advertisement

இளையான்குடி:இளையான்குடி அருகே உள்ள குறிச்சியில் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பதோடு,குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது.
அரசு கட்டடங்கள் பல பயனற்று கிடப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். குறிச்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 2015--16ல் ரூ.4 லட்சம் செலவில் இங்கு கட்டப்பட்ட நீர்தேக்கத் தொட்டி இன்று வரை பயனற்று கிடக்கிறது. தொட்டிக்கு அருகில் உள்ள போர்வெல்லில் அடிகுழாய் பொருத்தியதோடு சரி, நீர்தேக்கத் தொட்டியில் இன்று வரை தண்ணீர் ஏற்றப்படவில்லை. குறிச்சியில் இரண்டு இடங்களில் குளியல் தொட்டி கட்டப்பட்டும், தண்ணீர் இணைப்பு வழங்கப்படாததால் இரண்டு தொட்டிகளுமே பயனற்று கிடக்கிறது.தவிர, நுாலக கட்டடம் முன்பு உள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பை நிரம்பி அப்பகுதியே குப்பைக்காடாக காட்சியளிக்கிறது.நுாலக கட்டடம், மகளிர் சுகாதார வளாகம் உட்பட பல கட்டடங்கள் பயனற்று கிடப்பதாகவும், இதனால், பல லட்சரூபாய் வீணாவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது: நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு நான்கு வருடங்களை கடந்தும், இன்றுவரை தண்ணீரின்றி பயனற்று கிடக்கிறது. அதேபோல் மகளிர் சுகாதார வளாகம், நுாலக கட்டடம்,கிராம ஊராட்சி சேவை மையம் போன்ற பல கட்டடங்கள் பயனற்றுகாட்சி பொருளாக காணப்படுகிறது, என்றார்.இப்பகுதியைச் சேர்ந்த சாமி கூறியதாவது: குறிச்சியில், தண்ணீர் பிரச்னை முக்கியப் பிரச்னையாக உள்ளது. காவிரிநீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. ஆனால், போதுமான அளவு கிடைக்காமல்பெண்களிடையே தகராறு ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X