பொது செய்தி

தமிழ்நாடு

சோழபுரத்தில் வீணாகும் அரசு கட்டடம்

Added : ஜூன் 13, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே அரசு நிதியில் கட்டப்பட்ட சேவை மைய கட்டடம் ஐந்து ஆண்டுகளாக திறக்கப்படாமல் அரசு நிதி வீணாகி வருகிறது.
சோழபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.13.12 லட்சம் செலவில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டடப்பட்டது. 2013 - 14 ம் நிதியாண்டில் துவங்கிய பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இக்கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் அரசு நிதி வீணாகி வருகிறது. இக்கட்டடத்தை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இக்கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. கட்டடத்தை திறக்க தாமதித்தால் கட்டடம் பழுதாகி சீர்குலைய வாய்ப்புள்ளது. எனவே இக்கட்டடத்தை உனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X