பொது செய்தி

தமிழ்நாடு

அரசு விடுதிகளில் சேர அழைப்பு

Added : ஜூன் 13, 2019
Advertisement

சென்னை:''ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நல விடுதிகளில், மாணவ -- மாணவியர் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,'' என, சென்னை கலெக்டர், சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால், சென்னை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு என, மொத்தம், 22 கல்வி விடுதிகள் செயல்படுகின்றன.இதில், மாணவ - மாணவியருக்கு உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

விடுதியில் சேர, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.விடுதிகளில் சேர விரும்பும், மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கும் போது, குடும்ப அட்டை நகல், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில், பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள் சான்றொப்பமிட்டும், சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட, விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து, இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், 20ம் தேதி வரையிலும்; அதேபோல், கல்லுாரி விடுதிகளில், ஜூலை, 15ம் தேதிக்குள்ளும், சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2522 5657 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர், அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X