பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் பரிசோதனை முகாம்

Added : ஜூன் 13, 2019
Advertisement

கண்ணகிநகர்:கண்ணகிநகர் மக்களுக்கான, புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை, 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து,704 வீடுகள் உள்ளன. இங்கு, ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.கண்ணகிநகர் காவல் நிலையம் மற்றும் மெட்டால் பரிசோதனை மையம் இணைந்து, கண்ணகி நகர் மக்களுக்கு, புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடத்துகிறது.பரிசோதனை, 1ம் தேதி துவங்கியது. 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், 49 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு, பரிசோதனை செய்யப்படுகிறது.தினசரி, 20 - 30 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், நோய் பாதிப்பு கண்டறிந்தவர்களுக்கு, சிகிச்சை ஆலோசனை மற்றும் பரிந்துரை செய்யப்படுகிறது.''கண்ணகிநகரில் வசிப்போருக்கு, புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாக தேவைப்பட்டால், கண்ணகிநகர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்,'' என, ஆய்வாளர், வீரகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X