பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூன் 13, 2019

சாயல்குடி:-சாயல்குடி அருகே மலட்டாறு முக்கு ரோட்டில் உள்ள வி.வி.எஸ்.எம்., நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்தீ தடுப்பு குறித்த ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சாயல்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முனியசாமி தலைமை வகித்தார். துணை அலுவலர்கள் சார்லஸ், சந்திரசேகர் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் காட்டினர்.அவசர காலங்களில் கையாள வேண்டிய முறைகள் குறித்தும், தீ விபத்து நடக்காமல் பாதுகாப்பாக இருப்பது பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X