பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராத மீன் ஏலக்கூடம்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 பயன்பாட்டிற்கு வராத மீன் ஏலக்கூடம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டது முதல் பயன்பாட்டிற்கு வராமல் மீன் ஏலக்கூடம் பூட்டிக் கிடப்பதால் மீனவர்கள் தவிக்கின்றனர்.
.தேவிப்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் மீன் பிடி தொழில் செய்கின்றனர். இவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை இறக்க இறங்குதளம், மீன் ஏலக்கூடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மீன் வலை பின்னும் கூடமும் கட்டப்பட்டுள்ளது. இதில் மீன் வலை பின்னும் கூடத்தை மட்டும் மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல லட்சம் மதிப்பில் மீன் ஏலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. 2015ல் அப்போதைய முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்.திறப்பு விழா நடந்த நாள் முதல் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. மீனவர்களிடம் வியாபாரிகள் கடற்கரையிலேயே மீன்களை வாங்கி செல்கின்றனர். மீனவர்கள் மீன் ஏலக்கூடத்திற்கு கொண்டு வருவதில்லை. இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.தேவிப்பட்டினம் மீனவர் எஸ்.ராஷீத் கூறுகையில், மீனவர்கள் மீன்களை கரையில் வைத்து, வெயில், மழையை பொருட்படுத்தாது விற்பனை செய்யும் நிலை உள்ளது. மீன் ஏலக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X