பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி குடிநீர் குழாய் உடைப்பு

Added : ஜூன் 13, 2019
Advertisement

திருவாடானை:திருவாடானை அருகே ஓரிக்கோட்டை நீர்த் தேக்க தொட்டியில் இருந்து திருவாடானை, பண்ணவயல், சிநேகவல்லிபுரம், அண்ணா நகர், சமத்துவபுரம் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சேந்தனி அருகே பாலம் கட்டும் பணிகள் நடந்த போது மணல் அள்ளும் இயந்திரம் மூலம் பணியின் போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து அண்ணாநகர் மக்கள் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு சின்ன கீரமங்கலத்தில் இருந்து ஓரிக்கோட்டைக்குசெல்லும் சாலை செப்பனிடும் பணிகள் நடந்தது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்த போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு பத்து நாட்களாக தண்ணீர் வரவில்லை. தற்போது ஐந்து நாட்களுக்கு மேல் தண்ணீர் வராததால் பெரும் சிரமமாக உள்ளது. உடைந்த குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X