பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளரை வேலைக்குஅமர்த்தினால் மூன்றாண்டு சிறை

Added : ஜூன் 13, 2019
Advertisement

ராமநாதபுரம்:குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்தினால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், என மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் 14 வயது நிரம்பாத சிறுவர்கள், 18 வயது நிரம்பாத வளர் இளம்பருவத்தினரை வேலைக்கு அமர்த்தவோ, அனுமதிக்கவோ கூடாது. அப்படி அமர்த்தினால் அவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் 20 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.குழந்தைகளை பீடி சுற்றுதல், தீப்பெட்டி தயாரித்தல், பட்டாசு, வெடி மருந்துகள் தயாரித்தல், கட்டுமான தொழில், நெசவு தொழில், செங்கல் காளவாசல், உணவு விடுதிகள், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி ஈடுபடுத்தினால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள், என்றார்.சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வி.ராமலிங்கம், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.ராமகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி எம்.சிவப்பிரகாசம், மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன், வக்கீல்கள் சங்கத்தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி உட்பட நிர்வாகிகள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம், அரண்மனை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் ஜெ.எப்.பிளோமி, எஸ்.லோகநாதன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X