பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு  தின விழிப்புணர்வு

Added : ஜூன் 13, 2019
Advertisement
 குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு  தின விழிப்புணர்வு

ராமநாதபுரம்:தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்தது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அரண்மனை சாலையில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் சாலைத்தெரு வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. சுவார்ட்ஸ் பள்ளி வளாகத்தில் கலெக்டர் தலைமையில், மாணவர்கள் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரை முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X