பொது செய்தி

தமிழ்நாடு

அவலம்!ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்....எம்.ஆர்.ஐ.,இருக்கு ஆனால் இல்லை

Added : ஜூன் 13, 2019
Advertisement
அவலம்!ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்....எம்.ஆர்.ஐ.,இருக்கு ஆனால் இல்லை

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இருந்தும் நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப்பதில்லை. சி.டி., ஸ்கேன் பழுது காரணமாக நான்கு நாட்களாக அதுவும் செயல்படாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 800 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு அவசர சிகிச்சை பிரிவு, இருதய தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, பிரசவம், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, காச நோய், சித்த மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் செயல்படுகிறது. நோயாளிகள் வசதிக்காக அரசு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வழங்கியுள்ளது. ஆனால் நேயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை நடத்தப்படுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் நன்றாக இயங்கி வருகிறது, என்கின்றனர். நோயாளிகளிடம் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இங்கு எடுக்க முடியாது, என்கின்றனர். இதனால் ஏழை நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் சி.டி., ஸ்கேன் பழுதடைந்து நான்கு நாட்களாக செயல்படாத நிலையில் அவசர சிகிச்சை பெறுவோர் ஸ்கேன் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். இங்கு பரிசோதனைக்காக பல மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் எம்.ஆர்.ஐ., ஸ்கேன், சி.டி., ஸ்கேன் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரைக்கு பரிந்துரைஅவசர சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகள் இருந்தும், இங்கு வரும் நோயாளிகள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் ஏழை நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அனைத்து வசதிகள் இருந்தும், சிறப்பு டாக்டர்கள் இருந்தும், மேல் சிகிச்சைக்கு மதுரை பரிந்துரைப்பது நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கலெக்டர் வீரராகவ ராவ் இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X