பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தடி நிழலில் நடக்குது வகுப்பு

Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மரத்தடி நிழலில் நடக்குது வகுப்பு

கமுதி:கமுதி அருகே அரசு உயர்நிலைபள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவலம் உள்ளது.
.கமுதி அருகே செங்கப்படை ஆதிதிராவிடர்நலஉயர்நிலைபள்ளியில் 198 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிஇல்லாமல் 2 நாட்களுக்கு ஒருமுறை 300 ரூபாய்க்கு ஆசிரியர்கள் சொந்த செலவில் டேங்கர்களில் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. மேலும்,மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மரத்தடி நிழலில் வகுப்புகள் நடத்தும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மழை காலங்களில் மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகள் நடத்த முடியாத நிலையால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு தடையில்லாமல் கல்வி கிடைக்கும் வகையில், போதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-201903:14:27 IST Report Abuse
ஆப்பு காசு குடுத்தாலும் குடி நீர் கிடைக்குதா? வாழ்த்துக்கள்...இப்படிக்கு சென்னை வாசிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X