வாழையில் வாடல் நோய் தாக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழையில் வாடல் நோய் தாக்கம்

Added : ஜூன் 13, 2019

வாலாஜாபாத்:வாழையில், வாடல் நோய் தாக்கம் ஏற்பட்டிருப்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நெல்லுக்கு மாற்றுபயிராக, விவசாயிகள், வாழை சாகுபடி செய்கின்றனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம், பரந்துார், புள்ளலுார் உள்ளிட்ட கிராமங்களில், நெல் விவசாயத்திலிருந்து, வாழை விவசாயத்திற்கு, பலர் மாறியுள்ளனர்.இது போன்ற விவசாயிகளுக்கு, புதிய பயிர் சாகுபடி குறித்த விபரம் தெரியவில்லை. இதனால், பொருளாதாரத்தில் பெரிதளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நெல் மாற்றுப்பயிரில் இருந்து, வாழை மாற்று பயிர் சாகுபடிக்கு மாறியுள்ள வெங்கடேசன் கூறியதாவது:நெற்பயிரில் கிடைக்கும் வருவாய் போதவில்லை என, வாழை சாகுபடிக்கு மாறினேன். அந்த பயிரிலும், வாடல் நோய் தாக்கத்தால், அனைத்து முதலீடும் இழந்து நிற்கிறேன்.நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த, அதிகாரிகள் தகுந்த நேரத்தில் உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X