பொது செய்தி

தமிழ்நாடு

அத்தி வரதர் வைபவத்துக்கு ஏற்பாடு

Added : ஜூன் 13, 2019
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதர் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்துக்காக, 12.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதர் கோவிலில், ஜூலை, 1ம் தேதி முதல், அத்தி வரதர் வைபவம் துவங்கவுள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் கூறியதாவது:l வரதராஜ பெருமாள் கோவில் உட்புறத்தில், இரு சுத்திகரிப்பு இயந்திரங்கள், வெளிப்புறம், நான்கு சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.
நகரின் முக்கிய பகுதிகளில், ஆறு புதிய சுத்தகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளனl இது தவிர, 96 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றனl கோவில் அருகே, காவல் கட்டுப்பாட்டு அறையும், நகரை சுற்றி முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படுகின்றனl காதார துறையின் மூலமாக வாகன மண்டபம், திருமங்கையாழ்வார் சன்னதி, மேற்கு மாடவீதி, வாலாஜாபாத் நுழைவு போன்ற தற்காலிக பஸ் நிறுத்தங்களில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்படுகிறது
அத்தி வரதர் வைபவத்துக்காக, காஞ்சிபுரம் நகராட்சி மூலம், 4.37 கோடி ரூபாய், மின்வாரியம் மூலம், 92.37 லட்சம் ரூபாய், நெடுஞ்சாலைத் துறை மூலம், 4.96 கோடி ரூபாயில் பணிl ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரர்கள் மூலம், 2.52 கோடி ரூபாய், குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, 10 லட்சம் ரூபாய் என, 12.89 கோடி ரூபாய் செலவில், பணிகள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு நிர்வாகம் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X