பொது செய்தி

தமிழ்நாடு

எல்.கே.ஜி., ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

Added : ஜூன் 13, 2019
Advertisement
 எல்.கே.ஜி., ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள, எல்.கே.ஜி., வகுப்பு ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி, நேற்று துவங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு, 119 அரசு நடுநிலைப் பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இந்த வகுப்புகளை, மாணவ - மாணவியருக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், நான்கு ஆசிரியர்கள், முன்னதாகவே மாநில அளவிலான பயிற்சியில் பங்கேற்றனர்.பயிற்சி பெற்ற நான்கு ஆசிரியர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 119 ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில், இப்பயிற்சி நேற்று துவங்கியது. மொத்தம், 119 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.எல்.கே.ஜி., பயிலும் குழந்தைகளுக்கு எவ்வாறு பயிற்றுவிப்பது; அவர்களிடம் நடந்துகொள்ளும் முறைகள் மற்றும் இதர கல்வி சார்ந்த விஷயங்கள், இப்பயிற்சியில் தெரிவிக்கப் பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X