பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கைச்சூழல் வீடு பயிற்சி

Added : ஜூன் 13, 2019
Advertisement
 இயற்கைச்சூழல் வீடு பயிற்சி

மாமல்லபுரம்:வெப்பம், குளிர் பாதிக்காத, இயற்கைச்சூழல் வீடு அமைக்க, வாயலுார் இருளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பழங்காலத்தில், கோடை வெப்பம், கடுங்குளிர் என, இயற்கை காலநிலை, நம்மை பாதிக்காத வகையில், பனையோலை, தென்னங்கீற்று குடிசையில், நம் முன்னோர் வசித்தனர். பின் உருவான, ஓடுகள் வேய்ந்த வீடுகளும், நம்மை பாதுகாத்தன.தற்கால அறிவியல் முன்னேற்றத்தில், நவீன கான்கிரீட் வீடுகள், நம்மை, இயற்கை காலநிலையிலிருந்து பாதுகாக்காமல், பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், தன்னார்வ நிறுவனத்தினர், கல்பாக்கம், வாயலுார், தொகுப்பு கான்கிரீட் வீடுகளில் வசிக்கும் இருளர்களுக்கு, இயற்கைச்சூழல் வீடு அமைக்க, பயிற்சி அளித்தனர். கோடை வெப்பம், கடுங்குளிர், வீட்டினுள் பரவாத வகையில், பனையோலையில் மேற்கூரை வேய்ந்தும், மூங்கில் கழிகள் தடுப்பில், அடர்த்தியாக களிமண் நிரப்பிய சுவர் அமைத்தும், இயற்கைச்சூழல் வீடு அமைத்து, பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X