பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : ஜூன் 13, 2019
Advertisement

செய்யூரில் படையலிட்டு வழிபாடு

செய்யூர்: கடும் கோடையால், இரும்பேடு, செய்யூர், நல்லுார், வாழைப்பட்டு, ஜமீன் பூதுார் ஆகிய பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்பேடு பெரியாண்டவருக்கு வழிபாடு செய்தால், மழை வளம் பெருகும் என்பது இப்பகுதியினரின் நம்பிக்கை. அதை தொடர்ந்து, பெரியாண்டவருக்கு, தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடைபெற்றது.

கழிவுநீர் மேலாண்மை பயிற்சி
கருங்குழி: கருங்குழி பேரூராட்சி, கசடு கழிவுநீர் மேலாண்மையை, வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, இயற்கை உரம் தயாரித்தல் போன்றவற்றிலும், இப்பேரூராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதை தொடர்ந்து, கசடு கழிவுநீர் மேலாண்மையை, மற்ற நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கான ஒரு நாள் பயிற்சி கருங்குழியில் நடைபெற்றது.

இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வரும், 28ல்,இலவச கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.சென்னை சவீதா மருத்துவ கல்லுாரி மருத்துமனை மற்றும் காஞ்சிபுரம் மோகன்ஸ் மெடிக்கல் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் நடத்தப்படுகிறது.இதில், பங்கேற்க விருப்பமுள்ளோர்,99446 55692 என்ற மொபைல்போன் எண்ணில் முன்பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமாத்தம்மன் கோவிலில் தீ மிதி விழா

கூரம்: காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், கிராம தேவதை சாமாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகாசி மாதத்தில் நடைபெறும் பால்குட விழா மற்றும் தீ மிதி விழா, 9ம் ஆண்டாக, நேற்று முன்தினம் நடந்தது.கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அங்கு, சாமாத்தம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. மாலை, தீ மிதி விழா நடந்தது.

காஞ்சியில் சொற்பொழிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில், பன்மொழி காஞ்சி, தென்னிந்திய மொழியியல் ஆய்வு, மொழியியல் என்றால் என்ன ஆகிய தலைப்புகளில் அமைந்த சொற்பொழிவு, காஞ்சிபுரத்தில் நடந்தது.பேராசிரியர், ப.அண்ணாதுரை வரவேற்றார். கர்நாடகா மாநில, கடகாஞ்சி, மொழியியல் துறை மத்திய பல்கலைக்கழகத்தின், கன்னட மொழித்துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பவசராஜா சிறப்புரையாற்றினார்.

நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில், சங்க உறுப்பினர்களுக்கு சரிகை, பாவு தடையின்றி வழங்க வேண்டும். கூலி உயர்வு மற்றும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர்.

மழை பெய்ய வேண்டி தொழுகை

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் வசிக்கும் ஏராளமான இஸ்லாமியர்கள், உத்திரமேரூர் ஏரியில் ஒன்றுக்கூடி, தொழுகை செய்தனர்.மக்களின் தாகம் தீர்க்கவும், விவசாயம் செழிப்பாக நடைபெறவும், மழை பெய்ய வேண்டி, அவர்கள், தொழுகை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X