பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பம்பட்டில் மேம்பால பணி:ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 வேப்பம்பட்டில் மேம்பால பணி:ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும்

வேப்பம்பட்டு:திருவள்ளூர் அருகே, வேப்பம்பட்டு பகுதியில், மேம்பால பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி நேற்று நடந்தது.

சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருநின்றவூர் - வேப்பம்பட்டு இடையே கடவுப்பாதை எண்: 13 உள்ளது. இந்த கடவுப்பாதையை பயன்படுத்தி, வேப்பம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமாள்பட்டு, புதுச்சத்திரம், திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னை சென்று வந்தனர்.

இந்த கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, 2011-12ல், இப்பகுதியில் நில எடுப்பு உட்பட, 28.72 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.இதையடுத்து, வேப்பம்பட்டு - பெருமாள்பட்டு பகுதியை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை பகுதியில், 16 துாண்களும், ரயில்வே பகுதியில் இரண்டு துாண்களும் என, மொத்தம், 18 துாண்களுடன் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, ரயில்வே பகுதியில், இரு துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள், இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்தது. ஆனால், நெடுஞ்சாலை பகுதியில், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், 29ம் தேதி, 7.5 மீட்டர் அகலம், 800 மீட்டர் நீளத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள், பூமி பூஜையுடன் துவங்கின.ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த் துறையினர் மேற்கொள்ளாததால், மேம்பால பணிகள் துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த, அரசுக்கு சொந்தமான, 20 சென்ட நிலத்தில், கட்டப்பட்ட குடியிருப்புகள் அகற்றும் பணி துவங்கியது.இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணியில், துணை தாசில்தார் வசந்தி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சந்திரசேகரன், உதவி பொறியாளர் திலீபன், வருவாய் ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் சவுந்திரராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளை. 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X