பொது செய்தி

தமிழ்நாடு

மீனவ பெண்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை

Added : ஜூன் 13, 2019
Advertisement
 மீனவ பெண்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை

பழவேற்காடு:சிலிண்டர் மற்றும் சேலையில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது குறித்து, மீனவ கிராம பெண்களிடம், தீயணைப்புத் துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி செய்து பயிற்சி அளித்தனர்.
பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில், நேற்று முன்தினம், பழவேற்காட்டில் தீ தடுப்பு மற்றும் அவசர காலங்களில் பாதுகாப்பு குறித்து, ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.துறை இயக்குனர் உத்தரவின்படி, மாவட்ட அலுவலர் சுப்ரமணி மேற்பார்வையில், பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில், 10க்கும் மேற்பட்ட வீரர்கள், தீ தடுப்பு மற்றும் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காட்டினர்.

அரங்குப்பம் கிராமத்தில், தண்ணீரில சிக்கி கொண்டவர்களை மீட்பது, கையில் இருக்கும் பொருட்களை கொண்டு லைப் ஜாக்கெட்டாக பயன்படுத்தி தப்பிப்பது உள்ளிட்டவற்றை செய்து காட்டினர்.செஞ்சியம்மன் நகரில், மீனவ பெண்கள் சமையல் செய்யும் போது ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து, தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

சிலிண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டால், அவற்றை அணைப்பது, பெண்கள் சேலையில் தீப்பிடித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தால், அதிலுள்ளவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என, தத்ரூபமாக செய்து காட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X