விபத்தில் தபால் ஊழியர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் தபால் ஊழியர் பலி

Added : ஜூன் 13, 2019

விபத்தில் தபால் ஊழியர் பலி

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, போரக்ஸ் நகர் பகுதியில் வசித்தவர் செங்கய்யன், 45; செங்குன்றம் தபால் நிலைய ஊழியர். நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா ைஷன்' இருசக்கர வாகனத்தில், பொன்னேரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, தச்சூர் அருகே, நின்றிருந்த லாரியின் மீது, இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே, செங்கய்யன் இறந்தார்.

முதியவர் துாக்கிட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, கெட்ணமல்லி கிராமத்தில் வசித்தவர் ரங்கன், 70; விவசாயி. அவரது வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில், நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.இரு லாரிகள் பறிமுதல்கும்மிடிப்பூண்டி: சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பஞ்செட்டி பகுதியில், கவரைப்பேட்டை போலீசார், நேற்று வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து, மணல் கடத்தி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுனர்கள், தப்பி சென்றனர்.

ஓட்டல் உரிமையாளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், பஜார் பகுதியில், தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுந்தரமூர்த்தி, மேற்கண்ட தனியார் ஓட்டலில், திடீர் சோதனை நடத்தினார்.இதற்கு, ஓட்டல் உரிமையாளர் சத்தியநாராயணா, 45, எதிர்ப்பு தெரிவித்து, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சத்தியநாராயணா புகாரையடுத்து, ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X