வேலை செய்யாத கட்சியினர்:பிரியங்கா கோபம்

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (54)
Advertisement

ரேபரலி : லோக்சபா தேர்தலில் காங்., கட்சி பெற்ற தோல்விக்கு காரணம் என்ன என்பதை ஆராயும் பணியில் அக்கட்சியின் உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் பிரியங்கா இறங்கி உள்ளார்.





உ.பி., லோக்சபா தேர்தலில் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. அதே சமயம் பிரியங்காவின் சகோதரரும், கட்சி தலைவருமான ராகுல் அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். சோனியாவிற்கு ஓட்டளித்த ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தாய் சோனியாவுடன் நேற்று சென்றிருந்தார்.




தொண்டர்களிடம் பேசிய பிரியங்கா, கட்சியினர் வெற்றியை போதிய அளவு உறுதி செய்யவில்லை. தேர்தலில் கட்சிக்காக எவரெல்லாம் உழைக்கவில்லை என்பதை நான் கண்டறிவேன். நான் எதை பற்றியும் பேச விரும்பவில்லை. ஆனால் உண்மையை பேச வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.
சோனியா மற்றும் ரேபரேலி மக்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மத அடிப்படையில் யார் வேலை செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூன்-201920:50:39 IST Report Abuse
மாறன் கடைசி வர பிரதமர் வேடப்பாளர் யாருன்னே சொல்லாம தேர்தலையே பாத்து முடிச்சு கின்னஸ் சாதனை படைத்த ஒரே கட்சி..!
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201920:47:28 IST Report Abuse
சேவியன் வின்சி தொகுதி பக்கமே தல வச்சு படுக்கல்லயாம். அந்த தொகுதி மக்களே சொல்றாங்க. என்ன செய்யலாம்ன்னு உத்தேசம்?
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
13-ஜூன்-201919:38:41 IST Report Abuse
mohankumar நாங்கள் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை கஷ்டப்பட்டு உழைத்து கட்சியை முன்னேற்றுவோம் ஆனா நீங்க குடும்பம் மட்டும் தாத்தா ,மகள் , பேரன் ,மருமகள் ,பேரன் ,அக்கா, கொள்ளு பேரன் ,பேத்தி என்று வரிசையாக பிரதமர் பதவியிலேயே குறியாக இருந்து கொண்டு கொள்ளை அடிப்பீர்கள். கட்சி மேலிடம் அதாவது சிதம்பரம் ,அவன் பையன் ,என்று அடுத்த தலைமுறை ஆட்கள் வாரிசுகள் பதவியில் அடுத்து சிதம்பரம் பேரன் இதே போல் ,கமல்நாத்,அவர் பேரன் அசோக் கெலாட்,அவர் பேரன் சச்சின் பைலட்,அவர் பேரன் , ஷீலா டிஷ்ஷிட் ,அவர் பையன் ,அவர் பேரன் என்று நீங்கள் எல்லாம் ராஜா வாழ்க்கை பரம்பரையாக வாழ தொண்டர்கள் உழைக்க வேண்டுமாம் . பிஜேபி பாருங்கள் டி விற்றவர் பிரதமர் ,அவர் வாரிசு ரெடி ஆக பின்னால் நிற்கிறார்களா ? . அதே போல் இப்போதைய மந்திரி சபையில் டி விற்றவர் மத்திய மந்திரி. ஒரிசாவில் குடிசையில் வாழும் ஒருவர் மந்திரி . நிதி அமைச்சர் அவர் பதவியில் ஒதுங்கிய அடுத்த கணம் அவர் தன வீடு காலி செய்தார் , கரண்ட்,டெலிபோன் பில் தன் காய் காசு போட்டு கிளோஸ் செய்து விட்டு விலகினார் அரசு கார் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு வெளியேறினார் அவர் வாரிசு உண்டா அமைச்சரவையில் அல்லது அரசியலில் . இதுதான் RSS வழி வந்த பிஜேபி . காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி இனி எவ்வளவு நாள் உழைத்து இத்தாலி குடும்பத்தை முன்னேற்றுவார்கள். காங்கிரஸ் மோடியை போல் நல்ல எளிமையான தலைவரை கொண்டு வந்து கஷ்டப்பட்டால் பிழைக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X