குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறு: டிஎன்பிஎஸ்சி பகீர்

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை ; தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்டவற்றில் 24 கேள்விகள் தவறானவை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒப்புக்கொண்டுள்ளது.கடந்த மார்ச் மாதம், தமிழகத்தில் நடந்த குரூப் 1 தேர்வில், மொத்தம் ஒரு லட்சத்தி 68 ஆயிரம் பேர் எழுதினர். இதில் மாதிரி விடைகள் வெளியிடப்பட்ட பின்னர்

சென்னை ; தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்டவற்றில் 24 கேள்விகள் தவறானவை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒப்புக்கொண்டுள்ளது.



latest tamil news



கடந்த மார்ச் மாதம், தமிழகத்தில் நடந்த குரூப் 1 தேர்வில், மொத்தம் ஒரு லட்சத்தி 68 ஆயிரம் பேர் எழுதினர். இதில் மாதிரி விடைகள் வெளியிடப்பட்ட பின்னர் அதில், 18 கேள்விகள் தவறானவை என்று சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் புகார் கூறினார். தேர்வு முடிவுகளை தள்ளிவைக்குமாறு கூறினார்.


latest tamil news



ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த டிஎன்பிஎஸ்சி ஏப்ரலில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து விக்னேஷ் உள்ளிட்ட சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதில், டிஎன்பிஎஸ்சி சார்பில், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனை நீதிபதி போட்டித் தேர்வுகளில் தவறான கேள்விகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கண்டித்தனர். பின்னர் விரிவான பதில் மனுவை, வரும் ஜூன் 17 க்குள் தாக்கல் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.



Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூன்-201918:00:20 IST Report Abuse
J.Isaac சம்பந்தபட்டவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும்.
Rate this:
Cancel
14-ஜூன்-201902:57:31 IST Report Abuse
ஆப்பு இவிங்களையெல்லாம் கூண்டோட வேலையை விட்டு நீக்கணும்.
Rate this:
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
13-ஜூன்-201922:49:18 IST Report Abuse
Gnanasekaran Vedachalam தமிழக அரசு இது போன்று நடைபெறும் அவலங்களை சரிசெய்ய தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தை சீர்திருத்தம் செய்யலாமே தமிழகம் இந்தியாவுக்கே முன் மாதிரி மாநிலம் தொடர்ந்து ஒவ்வரு முறையும் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே உள்ளது எங்கு குறை உள்ளது என்பதை ஆய்வு செய்து இந்த தன்னாட்சி நிறுவனம் நல்ல முறையில் செயல் பட வழி வகை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X